News March 19, 2025
கியா கார் விலையும் ஏப்ரல் முதல் உயருகிறது

உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாக கூறி, <<15802386>>மாருதி <<>>சுசூகி, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஏப்ரல் முதல் கார் விலையை உயர்த்தவுள்ளன. இந்நிலையில், கியா நிறுவனமும் கார் விலையை ஏப்ரல் 1 முதல் 3% வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதத்தில்தான் அந்நிறுவனம் கார் விலையை 3% வரை உயர்த்தியது. இதையடுத்து 3 மாதங்களில் மீண்டும் விலையை கியா உயர்த்துகிறது.
Similar News
News July 8, 2025
மலையாள நடிகர் சௌபின் சாகிர் கைது

பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப விகிதத்தையோ தரவில்லை என சிராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சௌபின் சாகிர், அவரது தந்தை உட்பட 3 பேரும் ஏற்கெனவே முன்ஜாமின் வாங்கி இருந்த நிலையில் விசாரணைக்கு பின் சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
News July 8, 2025
இன்டர்நெட் இல்லாமலே மெசேஜ் அனுப்பலாம்… புதிய ஆப்!

டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் CEO ஜாக் டோர்ஸி, ‘பிட்சாட் (Bitchat) என்ற புதிய மெசேஜிங் ஆப்-ஐ உருவாக்கியுள்ளார். இதற்கு இன்டர்நெட், போன் நம்பர், (அ) சர்வர் எதுவும் தேவையில்லை. புளூடூத் மூலம் peer-to-peer முறையில் இந்த ஆப்பில் மெசேஜ் அனுப்பலாம். தற்போது இது டெஸ்டிங்கில் உள்ளது. தனியுரிமை பாதுகாப்பு மற்றும் off-grid communication நோக்கில் பிட்சாட்டை உருவாக்கியுள்ளதாக ஜாக் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
தவெகவின் புதிய செயலி.. என்ன ஸ்பெஷல்?

தவெக கட்சி சார்பில் MY TVK என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இக்கட்சி செல்போன் செயலியை கொண்டு சேர்க்கையை நடத்தி வருகிறது. புதிய செயலியை விஜய் விரைவில் அறிமுகம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் தொண்டர்களுக்கு அவரே எடுத்து சொல்வாராம். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து விஜய் தனது அரசியல் நகர்வுகளை வேகப்படுத்தி வருகிறார்.