News August 14, 2024
NCW உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு NCW உறுப்பினரான நிலையில், திடீரென தற்போது பதவி விலகியுள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக NCW தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்புவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. அப்போது உடல்நிலையை காரணம் காட்டி, அவர் பிரசாரம் செய்யவில்லை.
Similar News
News November 22, 2025
குமரி: இதை செய்யலயா? PAN கார்டு செல்லாது!

பான்கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். இதனை தடுக்க <
News November 22, 2025
தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
News November 22, 2025
தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


