News June 26, 2024
விசாரணை நடத்துகிறார் குஷ்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.
Similar News
News October 19, 2025
இந்தியாவின் முதல் Antibiotic மருந்து!

சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பயன்படும் ‘Nafithromycin’ என்ற Antibiotic, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இது, புற்றுநோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை Wockhardt என்ற தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, அரசின் BIRAC ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது.
News October 19, 2025
பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறியது இவர்தான்!

பிக்பாஸ் தமிழ் இந்த வார எவிக்ஷனில், போட்டியாளர் அப்சரா சிஜே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 2-வது வார நாமினேஷனில் FJ, அரோரா, விஜே பாரு, சபரிநாதன், திவாகர், கெமி, அப்சரா CJ இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் அப்சரா சிஜே எவிக்ட் செய்யப்பட்டார். போட்டியாளர்கள் எண்ணிக்கை 17-ஆக குறைந்துள்ள நிலையில், விரைவில் சிலர் வைல்ட்கார்டு என்ட்ரி கொடுக்கவுள்ளனர்.
News October 19, 2025
கேப்டனாக கில் படைத்த மோசமான சாதனை

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியே தழுவியுள்ளது. 2024-ம் ஆண்டு டி20-ல் ஜிம்பாப்வே, டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ODI-ல் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்தியா தோற்றதால் கேப்டன்ஸியில் மோசமான சாதனைக்கு கில் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இப்பட்டியலில் ஏற்கெனவே விராட் கோலி, ஷான் பொல்லாக், தில்ஷன், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்களும் அடங்குவர்.