News January 2, 2025
குஷ்பு, அண்ணாமலை பிரச்னை முடிந்தது

கட்சி நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்கவில்லை என்ற பிரச்னை கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டதாக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அவர், கட்சித் தலைமையின் அழைப்பின் பேரில்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் அண்ணாமலைக்கும் குஷ்புவுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
Similar News
News December 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 556 ▶குறள்: மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. ▶பொருள்: ஆட்சியாளருக்கு புகழ் நிலைத்திருக்க காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.
News December 21, 2025
தென் கொரியாவை வதைக்கும் வழுக்கை பிரச்னை

தென் கொரியாவில் வழுக்கை பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, 240,000 பேர் முடி உதிர்வுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 40% பேர் இளைஞர்கள். இந்நிலையில், தென் கொரிய அதிபர் லீ ஜே-ம்யூங், முடி உதிர்வால் இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும் என்று, முடி உதிர்வுக்கான சிகிச்சையை, தேசிய சுகாதார காப்பீட்டில் சேர்க்க பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? SHARE.
News December 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 21, மார்கழி 6 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


