News April 8, 2025
ஹீரோயினாகும் குஷ்பூ மகள்?

குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இவருடைய போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்தது. அப்போது முதலே சினிமாவில் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஒருவேளை அவர் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தால், தனது அம்மாவை போல், முன்னணி நடிகையாக வலம்வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Similar News
News December 1, 2025
இதையெல்லாம் டிரை பண்ணுங்க.. ஜாலியா இருங்க

காலை எழுந்திருப்பது முதல் இரவு தூங்கும் வரை, சில எளிமையான செயல்கள், உடலுக்கு மிகப்பெரிய நிம்மதியான உணர்வை உருவாக்கும். அந்த சிறிய பழக்கவழக்கங்கள் நமது அன்றாட வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
இந்தியா – ரஷ்யா இடையே ஆயுத ஒப்பந்தம்

ரஷ்ய அதிபர் புடின் வரும் 4, 5-ம் தேதிகளில் இந்தியா வருகை தர உள்ளார். அப்போது, ஆயுத கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவின் S-57 போர் விமானங்கள் மற்றும் S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நவீன தளவாடங்கள் இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News December 1, 2025
இனி இந்த பொருள்களின் விலை உயரும்!

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில், வரி சீர்திருத்தம் தொடர்பான 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பான் மசாலா மீதான வரி உயர்த்தப்படலாம். இதனால் இப்பொருள்கள் விலையேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர காஃபின் கலந்த குளிர்பானங்கள், தனி விமானங்களுக்கான வரியும் உயர்த்தப்பட உள்ளதாம்.


