News March 25, 2024

மக்களவைத் தேர்தலில் கார்கே மருமகன் போட்டி

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். குல்பர்கா தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற கார்கே, கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால், இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் கார்கேவின் மருமகனை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Similar News

News October 25, 2025

மேக்கப் போடுறீங்களா? கண்டிப்பா இத கவனிங்க

image

நீங்கள் போடும் மேக்கப்பை சரியாக கழுவவில்லை என்றால் அதுவே பல சரும பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். அதனை இயற்கையான முறையிலேயே அகற்ற பல வழிகள் இருக்கின்றன. மேக்கப்பை அகற்ற தேங்காய் எண்ணெய் அல்லது கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். இதனால், மென்மையான உங்கள் சருமத்தில் மேக்கப்பால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க முடியும். SHARE.

News October 25, 2025

டெல்லியில் NIGHT SHIFT-க்கு அனுமதி

image

டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேர பணியில் வேலை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் பெண்களுக்கான பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதி, கடைகளில் சிசிடிவி உட்பட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பணியிடங்களில் கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கான வேலை நேரமும், ஊதியமும் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News October 25, 2025

வீட்டு குழாய்களில் உப்பு அடைப்பா? இதை பண்ணுங்க

image

வீட்டு குழாய்களில் உப்பு அடைப்பால் தண்ணீர் வரவில்லையா? இதை பண்ணுங்க.. *தண்ணீர் தொட்டியை முதலில் கழுவி சுத்தப்படுத்தவும். *தொட்டியில் இருந்து குழாய்களுக்கு செல்லும் பைப்களை மூடி, T வடிவ பெண்ட் வழியாக 10 லிட்டர் ஆசிட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். *24 மணி நேரத்திற்கு பைப்களில் ஆசிட் நன்கு ஊறட்டும். *இப்போது T பெண்ட் வழியாக தண்ணீரை விடவும். *உள்ளே அடைத்திருந்த உப்பு கரைந்து மொத்தமும் வெளிவரும்.

error: Content is protected !!