News May 28, 2024
மக்கள் சேவையை மறந்து சர்ச்சைக்கு வித்திட்ட காக்கிகள்

அரசுப் பேருந்தில் போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததால் மூண்ட சர்ச்சை முடிவுக்கு வந்ததாக இருதரப்பும் அறிவித்தது. எனினும், பேருந்தில் வாக்குவாதம் நடந்தபோதும், பேருந்துகளுக்கு Traffic போலீஸ் அபராதம் விதித்தபோதும், பாதிக்கப்பட்டது மற்ற பயணிகள்தான். மக்கள் சேவகர்கள் என்பதை மறந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் சர்ச்சை எழுவதற்கு 2 துறைகளும் காரணமாகி விட்டதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
கிருஷ்ணகிரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News March 4, 2026
உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா ட்ரம்ப்?

ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது விமானத் தளத்தை US ராணுவம் பயன்படுத்த ஸ்பெயின் மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், வர்த்தக உறவை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், தங்களுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது, தேவையான இடத்தில் போர் விமானங்களை நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா டிரம்ப் என பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
News March 4, 2026
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.


