News January 7, 2025

நாளை KGF ஹீரோவின் அடுத்த பட அப்டேட்

image

KGF ஹீரோ யஷ் நடித்து வரும் ‘டாக்ஸிக்’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை காலை 10.25 மணிக்கு அப்டேட் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிவின் பாலியை வைத்து மலையாளத்தில் படங்களை இயக்கிய கீது மோகன்தாஸ், இப்படத்தை இயக்குகிறார்.

Similar News

News September 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 458 ▶குறள்: மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. ▶பொருள்: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

News September 14, 2025

சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்

image

சிம்பு – வெற்றிமாறன் படத்தில் பணியாற்றுவதை ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் சிம்பு நடிக்கவுள்ள வடசென்னை யுனிவர்ஸ் படத்தின் ப்ரோமோ வெளியானது. இதன் மிரட்டலான பின்னணி இசையை கேட்டு இசையமைப்பாளர் யாராக இருக்கும். சந்தோஷ் நாராயணனா ? ஜிவி பிரகாஷா என ரசிகர்கள் விவாதித்தனர். இந்நிலையில், அப்படம் எடுக்கப்பட்டால் தானே இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

News September 14, 2025

விஜய்யின் பரப்புரை ரத்து

image

பெரம்பலூரில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. விஜய் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். ஆனால் மக்கள் கூட்டத்திற்கு இடையே அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கு விஜய்க்கு நள்ளிரவுக்கு மேல் ஆனது. இதனால் வேறு வழியின்றி பெரம்பலூர் பரப்புரை ரத்தானது. விஜய்யின் பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

error: Content is protected !!