News July 21, 2024

அணு மின் நிலைய அதிகாரியின் முக்கிய பேச்சு

image

நெல்லையில் இன்று (ஜூலை 21) நடந்த அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய கூடங்குளம் அணு மின் நிலைய விஞ்ஞானி ஸ்ரீ ஜாய் வர்கீஸ் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வெளியேற்றப்படும் வெப்பநீரால் கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பரப்பப்படும் தகவல் தவறானது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மிகவும் தரமான அளவில் அணுமின் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News September 13, 2025

நெல்லை: கோர்ட்டில் போலீசார் வக்கீல்கள் வாக்குவாதம்

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விஷயமாக ராக்கெட் ராஜா நேற்று ஆஜரானார். இதையொட்டி கோர்ட் வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோர்ட்டுக்கு வந்தவர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கபட்டனர். அப்போது கோர்ட்டுக்கு காரில் வந்த வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

News September 13, 2025

நெல்லை: 34 வாரங்களில் 60 பேருக்கு ஆயுள் தண்டனை

image

2025 ஆண்டில் இதுவரை 17 கொலை வழக்குகளில் நெல்லை மாவட்ட போலீசார் குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்து உள்ளனர். இதில் ஒருவருக்கு மரண தண்டனையும் 60 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கபட்டு உள்ளது. இதில் 20 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2025ம் ஆண்டில் இதுவரை கொலை வழக்கு கொலை முயற்சி போக்சோ வழக்குகளில் 23 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கபட்டுள்ளது.

News September 13, 2025

நெல்லை பஸ் நிலைய கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

image

புது பஸ் நிலைய கடையில் இன்று தீ பிடித்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா உத்தரவு படி புது பஸ் நிலையத்தில் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கடை நடத்தும் உரிமையாளர்களின் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன் உரிய உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.

error: Content is protected !!