News May 7, 2025
சிம்மத்தில் நுழையும் கேது: ஏற்றம் காணும் 3 ராசிகள்

கேது கிரகம், வரும் மே 18-ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைவதால் முன்னேற்றம் காணப் போகும் 3 ராசிக்காரர்கள்: *ரிஷபம்: தடைபட்ட பணிகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு *விருச்சிகம்: சாதகமான சூழல் ஏற்படும். வேலை, தொழிலில் முன்னேற்றம். திருமண வரன் தேடி வரும் *தனுசு: பிரச்னைகள் தீரும். தொழில் வளர்ச்சி, நல்ல லாபம் ஏற்படும். பணி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News November 22, 2025
காட்பாடி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

இன்று (நவ.22), வேலூர் மாநகராட்சி மண்டலம் -1 க்கு உட்பட்ட வார்டு எண்: 6 வி.ஜி .ராவ் நகரில் நடைபெற்றது. “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமை வேலூர் ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சமி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தனர். பின்னர் பயனாளிகளுக்கு பரிசோதனை சான்றுகளை வழங்கினார்.
News November 22, 2025
847 பந்துகளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 847 பந்துகளில் முடிவுக்கு வந்தது. 1895-ல் நடந்த டெஸ்ட் 911 பந்துகளில் முடிந்தது. அதன்பிறகு, கடந்த 130 ஆண்டுகளில் விரைவாக முடிந்த டெஸ்ட் இதுதான். அதேபோல, குறைந்த நேரத்தில் இங்கி., அணி 2 இன்னிங்ஸ்களையும் முடித்த போட்டியும் இதுதானாம். இங்கி., பேட்ஸ்மென்கள் இந்த டெஸ்டில் 405 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர்.
News November 22, 2025
Delhi Blast: எலக்ட்ரீசியன் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக படாமலூ பகுதியை சேர்ந்த துபைஃல் நியாஸ் பட் என்பவரை ஜம்மூ காஷ்மீர் போலீஸ் கைது செய்துள்ளது. எல்க்ட்ரீசியனான நியாஸ் பட், டெல்லி தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களில் ஒருவராக கண்டறியப்பட்டுள்ளார். தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் பரூக்கும், நியாஸும் ஒரே பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே கைதான அடீல் அகமதுக்கு AK47 கொடுத்தாரா என போலீஸ் சந்தேகிக்கிறது.


