News January 21, 2025
UGC புதிய விதிகளை திரும்ப பெற கேரள அரசு தீர்மானம்

UGC புதிய விதிகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தனியார் துறையை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமித்தால், உயர்கல்வி வணிகமயமாக வழிவகுக்கும் எனவும் உயர்கல்வியில் ஜனநாயகத்தை முடக்கவே புதிய UGC விதிகள் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற்று புதிய விதிமுறைகளை UGC வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.
Similar News
News March 8, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT


