News June 29, 2024
கென்சிங்டன் ஓவல் மைதானம்: ஒரு கண்ணோட்டம்

T20 WC தொடரில், IND Vs SA இடையிலான இறுதிப் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 50 போட்டிகள் நடந்துள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 31 முறையும், 2ஆவதாக பேட்டிங் செய்யும் அணி 16 முறையும் வென்றுள்ளன. இதேபோல, முதல் இன்னிங்ஸ் சராசரி ரன்கள் 138, 2ஆவது இன்னிங்ஸ் சராசரி ரன்கள் 125. இறுதிப் போட்டியில் இந்திய அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும்?
Similar News
News September 19, 2025
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ECI ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத காரணத்தாலும், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாததாலும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் மொத்தம் 474 கட்சிகளை நீக்கியுள்ளதாக ECI கூறியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 334 கட்சிகள் நீக்கப்பட்டன.
News September 19, 2025
ரோபோ சங்கரின் மகிழ்ச்சியான தருணங்கள்!

அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு உன்னத கலைஞனை இழந்திருக்கிறது தமிழ் திரையுலகம். மறைந்த ரோபோ சங்கரின் பழைய போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. குடும்பத்தினருடன் அவர் இருந்தது, ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் கலக்கியது உள்ளிட்ட போட்டோஸை நெட்டிசன்கள் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலே இருக்கும் படங்களை நீங்களும் ஸ்வைப் செய்து பாருங்கள்.
News September 19, 2025
உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக: அன்புமணி

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் ஏக்கருக்கு அறிவித்த ₹6,800 இழப்பீடு தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஏக்கருக்கு ₹30,000 வழங்க அரசு தவறினால் போராட்டம் நடத்துவேன் என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.