News August 14, 2024
கெஜ்ரிவால் ஜாமின் மனு: SC இன்று விசாரணை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு, SC-யில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் ED தொடுத்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு SC கடந்த ஜூலை மாதம் 12இல் இடைக்கால ஜாமின் அளித்தது. எனினும், சிபிஐ தனியே வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தது. இதனால் சிறையில் கெஜ்ரிவால் தொடர்ந்து உள்ளார். இதை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News October 20, 2025
Mass-ஆக தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

எப்படா வருவாரு என காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். ஆண்டுதோறும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு, ரசிகர்கள் திரண்டு தீபாவளி வாழ்த்து பெற்று செல்வார்கள். இந்த ஆண்டும் காலை முதலே அவரது வீட்டு வாசலில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்கள் முன் Mass-ஆக வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார்.
News October 20, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தீபாவளி நாளான இன்று(அக்.20) தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,920-க்கும், சவரன் ₹95,360-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,90,000-க்கும் விற்பனையாகிறது.
News October 20, 2025
ஆஸ்துமா பிரச்னையா? தீபாவளிக்கான சில டிப்ஸ்

தீபாவளியன்று காற்றுமாசு பல மடங்கு அதிகரிக்கும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க: *வெளியில் செல்லும் போது மாஸ்க் அவசியம் *இன்ஹேலரை அருகில் வைத்துக் கொள்ளவும் *முடிந்தளவு பட்டாசு வெடிப்பதை குறைப்பது நல்லது. *பாதிப்புள்ள குழந்தைகள் பெரிய வெடிகளை தவிர்த்து, பெற்றோரின் மேற்பார்வையில் சின்ன வெடிகளை வெடித்து மகிழலாம் *இந்த சூழ்நிலையில் வெந்நீர் பருகுவது நல்லது.