News April 9, 2024
கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் இல்லை

கெஜ்ரிவால் கைது சட்டப்படி தானே தவிர, தேர்தல் சமயம் என்பதற்காக அல்ல என டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. ED கைது செய்ததை எதிர்த்த வழக்கில், அவர் ஒரு முதலமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை கொடுக்க முடியாது எனத் தெரிவித்த கோர்ட், பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை எனவும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News March 17, 2026
கூட்டணியில் இருந்து NR காங்., விலகல்? அரசியல் பரபரப்பு

புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியால்(LJK) புதுச்சேரி NDA கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆளும் NR காங்கிரஸுக்கு 16, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 14 சீட்டுகள் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது LJK-வுக்கும் சீட்டுகள் வேண்டும் என பாஜக, NR காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுப்பதால், கூட்டணியில் வெளியேறுவோம் என ரங்கசாமி திட்டவட்டமாக கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
News March 17, 2026
₹19,000 சம்பளம்.. ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்!

11,127 துணை லோகோ பைலட்டுகளை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பை RRB அறிவித்துள்ளது. பதவிகளுக்கேற்ப 10th – டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ₹19,900 – ₹63,200 சம்பளம் வழங்கப்படும். 18 – 30 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 17, 2026
வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகம்!

கடந்த சில நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று தலைகீழ் மாற்றமாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹4 உயர்ந்து ₹280-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் இன்று தங்கம் <<19404687>>விலை சவரனுக்கு ₹480<<>> குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


