News April 10, 2024
உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். கைதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Similar News
News March 7, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 7, 2026
மழையால் போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?

WC-ல் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால், மழையோ அல்லது வேறு காரணத்திற்காகவோ போட்டி பாதியில் தடைபட்டால் கோப்பை யாருக்கு என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். அப்படி போட்டி ரத்தானால் மீண்டும் திங்கட்கிழமைக்கு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும். அன்றைய தினமும் போட்டி பாதிக்கப்பட்ட இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.
News March 7, 2026
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுங்கள்!

இரவு உணவை சீக்கிரமாக (மாலை 6-8 மணிக்கு) சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் சிலருக்கு லேட் நைட்டில் பசி எடுக்கலாம். ஆனால், அப்போது சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவு உணவில் அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். இது லேட் நைட் பசியை கட்டுப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.


