News March 27, 2024
முக்கிய ஆதாரங்களை வெளியிடும் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நீதிமன்றத்தில் நாளை நிரூபிப்போம் என கெஜ்ரிவால் மனைவி சுனிதா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்ட சோதனைகளை ED நடத்தியதாக குறிப்பிட்ட அவர், ஊழல் எனக்கூறி அவர்கள் பணத்தை தேடி வருகின்றனர். ஆனால், எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றார். மேலும், நீதிமன்றத்தில் நாளை அனைத்து ஆதாரங்களையும் கெஜ்ரிவால் வெளியிடுவார் எனவும் அவர் கூறினார்.
Similar News
News December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு.. சோனியா, ராகுலுக்கு நிம்மதி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான ED-ன் குற்றப்பத்திரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் நிராகரித்துள்ளது. ED குற்றம்சாட்டுவது போல் இந்த பணமோசடி வழக்கு எந்த விசாரணை அமைப்பின் FIR அடிப்படையிலும் நடத்தாமல், தனியார் (சுப்ரமணியன் சுவாமி) அளித்த புகாரின் அடிப்படையிலானது என கூறி
வழக்கை விசாரிக்க கோர்ட் மறுத்துள்ளது. இதை குறிப்பிட்டு நீதி வென்றதாக காங்., தெரிவித்துள்ளது.
News December 16, 2025
அழகான பெண்களை கொண்ட நாடுகள்

உலகின் அழகான பெண்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை World of Statistics வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. மேலே, டாப் 10-ல் இடம்பிடித்த நாடுகளை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு எந்த நாட்டு பெண்களை பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 16, 2025
IPL ஏலத்தில் ₹14.2 கோடி.. இவருக்கு ஜாக்பாட் அடித்தது!

உத்தரப்பிரதேச உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் பிரசாந்த் வீர்(20) என்ற இளம் வீரரை ₹14.2 கோடிக்கு மினி ஏலத்தில் சிஎஸ்கே வாங்கியுள்ளது. ஜடேஜாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் அணிக்கு கொடுத்த நிலையில், அவரது இடத்திற்கு ஆல் -ரவுண்டர் பிரசாந்த் வீரை சிஎஸ்கே வாங்கியுள்ளது. இதேபோல், ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவையும்(19) ₹14.2 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியுள்ளது.


