News April 30, 2024
திகார் சிறையில் மந்திரியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம், பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில், டெல்லி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துமாறும் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக அதிஷி தெரிவித்தார்.
Similar News
News January 27, 2026
பிரபல நடிகர் காலமானார்!

பிரபல நடிகர் அலெக்சிஸ் ஒர்டேகா(38) திடீரென மரணமடைந்துள்ளார். The House of Flowers, El Candidato போன்ற சீரிஸ்களில் நடித்துள்ள இவர், சிறந்த டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். Spider-Man: Homecoming, Avengers: Infinity War போன்ற படங்களில் ஸ்பைடர் மேனுக்கு ஸ்பேனிஷ் மொழியில் இவர்தான் டப்பிங் கொடுத்துள்ளார். இவரது திடீர் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 27, 2026
‘ஜன நாயகன்’ சிக்கலுக்கு இதுவே காரணம்

<<18971849>>ஜன நாயகன் பிரச்னையில் <<>> CBFC தலைவருக்கு, சென்சார் குழு உறுப்பினர் ஒருவர் அனுப்பிய புகாரின் விவரம் வெளியாகியுள்ளது. படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டும் காட்சிகள் உள்ளதாகவும், ராணுவம் குறித்த காட்சிகளை சரிபார்க்க தங்களது குழுவில் பாதுகாப்பு வல்லுநர் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார். தனது ஆட்சேபனை ஏற்கப்படாததால், இதில் CBFC தலைவர் தலையிடுமாறு கோரியுள்ளார்.
News January 27, 2026
கூட்டணிக்கு TTV என்னை அழைக்கவில்லை: OPS

OPS நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வருவார் என<<18973340>> TTV தினகரன் <<>>தெரிவித்திருந்தார். ஆனால் TTV உட்பட யாரும் தன்னை கூட்டணிக்கு அழைக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதேசமயம் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தன்னுடைய ஒன்றை கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


