News June 26, 2024
கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிபிஐ கைது செய்தது. அப்போது, அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். காவலர்கள் அவருக்கு டீயும் பிஸ்கெட்டும் கொடுத்து பெஞ்சில் அமர வைத்தனர்.
Similar News
News December 1, 2025
BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (டிச.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹10.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,739.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
அதிமுக எங்களை ஏமாற்றவில்லை: பிரேமலதா

ராஜ்யசபா MP விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் MP பதவியை 2025-ல் கேட்டதாக கூறிய அவர், அதிமுகவில் இருந்து 2026-ல் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், MP சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த இவர், இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News December 1, 2025
டிரம்ப் – மதுரோ போன் கால்: நீடிக்கும் பதற்றம்

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுடன், தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உரையாடலின் முழு விவரங்களை வெளியிட மறுத்த டிரம்ப் ‘பேச்சுவார்த்தை நன்றாக நடந்தது என சொல்ல மாட்டேன். அதேநேரம் மோசமாகவும் நடக்கவில்லை. அது ஒரு வெறும் தொலைபேசி அழைப்பு’ என்று மட்டும் கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே <<18429070>>போர் பதற்றம்<<>> தொடர்ந்து நீடித்தே வருகிறது.


