News March 28, 2024

கெஜ்ரிவால் கைதால் அனுதாப வாக்குகள் கிடைக்கும்

image

கெஜ்ரிவால் கைது ஆம் ஆத்மிக்கு அனுதாப வாக்குகளை பெற்று தரும் என அக்கட்சியின் மூத்த தலைவர் அதிஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “கெஜ்ரிவால் கைது என்பது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு. ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் தாக்குதல். எதிர்கட்சிகளை அடக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெற பாஜக முயற்சிக்கிறது. இந்த முறை பாஜக அதற்கான விலையைக் கொடுக்கும்” எனக் கூறினார்.

Similar News

News March 18, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

தங்கம் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. சென்னையில், இன்று(18.03.2026) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 குறைந்து ₹14,570-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,16,560-க்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையான போர் பதற்றத்திற்கு மத்தியிலும் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது கவனிக்கத்தக்கது.

News March 18, 2026

திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது

image

திமுக கூட்டணியில் வெளிப்படையாகவே மோதல் வெடித்துள்ளது. கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைவான இடங்களை பெற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பிலிருந்து தங்களிடம் சொன்னதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டதாகவும் CPM மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அதேபோல், <<19412554>>திருமாவும்<<>> தொகுதிகளை குறைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால், திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 18, 2026

அரசியல் தலைவர்கள் மக்களை குழப்புவது நியாயமா?

image

தவெகவுக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்ததாக <<19412409>>ஆதவ் அர்ஜுனா பேசியது<<>> அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. காரணம், கடந்த ஒரு வாரமாக தவெகவுடன், NDA தரப்பு பேசி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அதனை EPS, நயினார், CTR நிர்மல் குமார் மறுத்திருந்தனர். இப்படி இருக்கையில், ஆதவ் பேசியது பொய்யா? (அ) தலைவர்கள் உண்மையை மறைத்து மக்களை குழப்புவது நியாயமா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர். உங்கள் கருத்து?

error: Content is protected !!