News January 5, 2025

₹33.66 கோடியில் மாளிகையை செதுக்கிய கெஜ்ரிவால்

image

டெல்லி CMஆக கெஜ்ரிவால் இருந்தபோது, அவரது இல்லத்தை மறுசீரமைக்க முதலில் ₹7.91 கோடி நிதி ஒதுக்கிவிட்டு, பின்னர் ₹33.66 கோடியில் பணிகளை முடித்ததாக CAG ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது. திரைச்சீலைகளுக்கு ₹96 லட்சம், கிச்சன் பொருள்களுக்கு ₹39 லட்சம், ஜிம் உபகரணங்களுக்கு ₹18.52 லட்சம், பளிங்கு சுவர்களுக்கு ₹66.89 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகள் ₹18.88 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

image

அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை EPS, ஜெயலலிதா பாணியில் வெளியிட்டு வருகிறார். கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார். அந்த வகையில், திருப்போரூர் தெற்கு ஒன்றிய MGR மன்ற செயலாளர் C.பாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

News September 13, 2025

முதல் பரப்புரை. விஜய்யின் இன்றைய திட்டம் என்ன?

image

விஜய், தனது தேர்தல் பரப்புரையை தமிழகத்தின் மத்தியிலுள்ள திருச்சியிலிருந்து இன்று தொடங்குகிறார். இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள பிரத்யேக பிரசார வாகனத்தில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.
*10.35 AM: திருச்சி மரக்கடை MGR சிலை அருகில்.
*1:00 PM: அரியலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில். *4:00 PM: பெரம்பலூர், குன்னம் பஸ் ஸ்டாண்ட் அருகில். *5:00 PM: பெரம்பலூர் வானொலித் திடல்.

News September 13, 2025

உடல் வலிமை பெற காலையில் இந்த யோகாவை பண்ணுங்க!

image

முதலில், பாதங்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு விரிப்பில் நேராக நிற்கவும். அடுத்து கைகளை மேலே உயர்த்தி, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே முதுகை பின்னோக்கி வளைக்கவும்; கைகளையும் சேர்த்து பின்னால் எடுத்து செல்லவும். தோள்பட்டை காதுகளுக்கு அருகில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். இந்த யோகாவை 5-10 நிமிடங்கள் செய்து வந்தால் Spinal cord பலப்படும். Share it.

error: Content is protected !!