News June 21, 2024
கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு

கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. இதனையடுத்து அவர் இன்று சிறையில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
Similar News
News September 15, 2025
தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள்

தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், சில இடங்கள் தெரியாமலும் இருக்கலாம். அதன்படி மேலே சில இடங்களின் போட்டோக்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். அதில், நீங்கள் இதுவரை கேள்விப்படாத பேய் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இடம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
News September 15, 2025
புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, புதிய திருப்பமாக தனிக் கட்சி தொடங்கியுள்ளார். மஞ்சள் நட்சத்திரங்களுடன் கருப்பு, சிவப்பு நிற கொடியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சியின் பெயரை நவ.20-ல் அறிவிப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க குழு அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருச்சியில் மதிமுக மாநாடு நடைபெறும் நிலையில், மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
News September 15, 2025
இந்தியாவின் lucky charm ஷிவம் துபே

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது துபே விளையாடிய 31 டி20 போட்டிகளில் தொடர்சியாக இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடங்கிய இந்த வெற்றி, நேற்றைய பாகிஸ்தான் இடையேயான போட்டிவரை தொடர்ந்துள்ளது.