News March 21, 2024

கெஜ்ரிவால் ஒரு “சதிகாரர்”

image

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, “சதிகாரர்” என ED குறிப்பிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஆம் ஆத்மி கட்சிக்கு ₹100 கோடி வழங்கப்பட்டதாகவும், சில குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் கெஜ்ரிவாலுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் நாயர் என்பவர் கெஜ்ரிவால் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக ED கூறியுள்ளது.

Similar News

News January 11, 2026

செரிமானத்திற்கு உதவும் சிறந்த உணவுகள்!

image

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்துக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்துகின்றன. அவை எந்தெந்த உணவுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News January 11, 2026

சாரல் பார்வை வீசும் சம்யுக்தா மேனன்

image

நடிகை சம்யுக்தா மேனன் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரது பார்வையோ, உறங்கி கிடந்த மனதை உலுக்குகிறது. சத்தமில்லாமல் சத்தமிடும் ரத்தின கட்டியாக, சொக்கி நிற்க வைக்கிறார். வலை வீசும் நிலவொளி போலவும், சிறை வைக்கும் நிழல் போலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News January 11, 2026

ஸ்டாலின் CM ஆக காங்., உழைத்தது: மாணிக்கம் தாகூர்

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை காங்., முன்வைத்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு பேரவை தேர்தலிலும் எங்கள் கட்சியும் தனியாக வாக்குறுதிகளை அளிக்கிறது, ஆனால் ஆட்சியில் பங்கு இருந்தால் மட்டுமே அதனை அமல்படுத்த முடியும் என அண்மையில் ஒரு பேட்டியில் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அதேநேரம், ஸ்டாலின் CM ஆக காங்., உழைத்ததாக குறிப்பிட்ட அவர், 2026 தேர்தலிலும் உழைக்க தயாராக இருக்கிறது என்றார்.

error: Content is protected !!