News March 18, 2024
ஜெய்ஷாவை சாடிய கீர்த்தி ஆசாத்

பிசிசிஐ செயலர் ஜெய்ஷாவை இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கிய ஜாம்பவான் கீர்த்தி ஆசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முதலில் ஜெய் ஷா அணித்தேர்வாளர் கிடையாது. அஜித் அகார்க்கர் தான் தலைமை தேர்வாளர். அணித் தேர்வு நடைமுறைகளில் முட்டாள்கள் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
Similar News
News August 10, 2025
புதுவை: மனநிம்மதியை தரும் எகிப்திய நடராஜர்

புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News August 10, 2025
தூய்மை பணியாளர்களுக்கு சீமான் ஆதரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.
News August 10, 2025
சிம்பு, வெற்றி மாறன் படம் கைவிடப்பட்டதா?

சிம்பு – வெற்றி மாறன் இணைந்துள்ள புதிய படத்தின் புரோமோவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்டத்துக்கு படம் நகரவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. இதனிடையே பேட்டி ஒன்றில் படத்தின் அறிவிப்பு புரோமோ விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் உடனடியாக ஆரம்பிக்க போவதாகவும் அப்டேட் கொடுத்து சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.