News March 23, 2025
கொழும்புவின் அழகில் மெய்மறந்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், அண்மையில் இலங்கை சென்றிருந்தார். அப்போது கொழும்பு நகரின் அழகை ரசித்து, அதைப் பற்றி தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்த அவரை, அங்குள்ள ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அவர் கொழும்பில் ஆட்டோவிலும் பயணித்து என்ஜாய் பண்ணியுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பிய கீர்த்தி, கொழும்புக்கு மீண்டும் எப்போது செல்வோம் என காத்திருப்பதாக கூறியுள்ளார்.
Similar News
News December 9, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
News December 9, 2025
இந்தியாவில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்

இந்தியா தனது லட்சியத்தை அடைவதற்கு மைக்ரோசாப்ட் துணை நிற்கும் என்று சத்யா நாதெல்லா உறுதியளித்துள்ளார். இதுபற்றி PM மோடியுடன் உரையாடியதாகவும், இந்தியாவின் AI வளர்ச்சிக்கு ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தொகையானது, ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு என்றும் இந்தியாவின் AI எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்பு, திறனை உருவாக்கிட உதவும் எனவும் கூறியுள்ளார்.
News December 9, 2025
கில்லர் லுக்கில் மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் அவர், கருப்பு நிற உடை, மின்னும் காதணிகள், பிரகாசமான முகம், வசீகரமான பார்வை என மொத்தமாக ரசிகர்களை ஈர்க்கிறார். மிருணாளின் கில்லர் லுக் ஸ்டைலிஷ் போட்டோக்கள், உங்களுக்கும் பிடிச்சிருந்த ஒரு லைக் போடுங்க.


