News December 12, 2024

கீர்த்தி சுரேஷுக்கு இன்று திருமணம்

image

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், அவரது காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கோவாவில் இன்று திருமணம் நடைபெறவுள்ளது. முதலில் காலையில் 2 பேரும் இந்துமத வழக்கப்படி திருமணம் செய்யவுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று மாலையில் கிறிஸ்தவ மத வழக்கப்படி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்களது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள், இருவரது குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

திமுகவிடம் கூடுதல் சீட் கேட்போம்: CPI

image

‘ஆட்சியில் பங்கு’ என்ற குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்க, கூடுதல் சீட்டுகளை ஒதுக்க திமுகவுக்கு, அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் உள்ளது. இந்நிலையில், CPI தரப்பிலும் கூடுதல் சீட்டுகள் கேட்கப்படும் என, அதன் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 2021 பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில், 6 இடங்களில் CPI போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2025

ஜீன்ஸ் பேண்ட் விஷயத்துல இந்த தவற பண்ணாதீங்க..

image

ஜீன்ஸ் பேண்ட், பல ஆடைகளுடன் சூட் ஆகும் என்பதால் தினமும் இதனை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால், இதை 1 முறை பயன்படுத்திய உடனேயே துவைக்க போடும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜீன்ஸை, 4-5 முறை அணிந்த பிறகு துவைத்தாலே போதுமானது என்கிறார்கள். துர்நாற்றம் வீசத் தொடங்கினால் மட்டும் விரைவில் துவைக்கலாம். இப்படி செய்வதால் தண்ணீரும் அதிகம் செலவாகாது.

News September 14, 2025

INDvsPAK போட்டியை யாரும் பாக்காதீங்க..

image

INDvsPAK போட்டி இன்று நடைபெறும் சூழலில், இப்போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி வலியுறுத்தியுள்ளார். டிவியில் கூட இப்போட்டியை பார்க்காதீர்கள் என கூறிய அவர், BCCI-க்கு கொஞ்சமும் கருணை இல்லை என விமர்சித்தார். மேலும், 1- 2 வீரர்களை தவிர, மற்ற இந்திய வீரர்கள் ஏன் எதுவும் பேசவில்லை என்ற கேள்வியை எழுப்பி, அவர்கள் நாட்டிற்காக நின்றிருக்க வேண்டும் எனவும் கூறினார்.

error: Content is protected !!