News August 8, 2024

தனுஷுக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்

image

நடிகர் தனுஷின் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது “குபேரா” படத்தில் நடித்து வரும் தனுஷ், இந்தியில் “தேரே இஸ்க் மே” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் கதாநாயகியாக பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனோன் நடிக்க இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 14, 2026

தொகுதிக்கு ₹5 கோடி செலவு.. தவெக மா.செ.,க்கள் ஷாக்

image

நேற்று புஸ்ஸி ஆனந்த் நடத்திய கூட்டத்தில் தவெக மா.செ-க்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. *ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவுக்கு குறைந்தது ₹5 கோடி தேவைப்படும் *அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யக்கூடிய வேட்பாளர்கள் கட்சியில் இல்லை *மக்களுக்கு பரிச்சயமான வேட்பாளர்களை கண்டறிவதில் சிக்கல் என கூறினராம். இதனால் தான் 90% மா.செ.,க்கள் கூட்டணிக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.

News March 14, 2026

தள்ளுபடி.. CM ஸ்டாலின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

image

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ் மானியம் அறிவித்துள்ளது. சிலிண்டர் பிரச்னை உள்ளவரை ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்றும், வீடுகளில் சமைத்து உணவு விற்போருக்கும் இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

பெட்ரோல் பங்க்குகளில் மண்ணெண்ணெய்

image

வளைகுடா போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் விற்பனைக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையகங்களில் தலா 2,500 லிட்டர் மண்ணெண்ணெயை ஒரு மாத காலத்துக்கு சேமித்து வைக்கவும் அனுமதி அளித்துள்ளது.

error: Content is protected !!