News October 7, 2025
காந்த கண்களால் கவர்ந்திழுக்கும் கீர்த்தி..!

கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது, தனித்துவமான முகபாவனைக்கே, தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மகாநதியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார். ‘ரகு தாத்தா’ படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது, கீர்த்தி SM-யில் பதிவிட்டுள்ள போட்டோஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தா லைக் போடுங்க.
Similar News
News October 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 7, புரட்டாசி 21 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News October 7, 2025
TRB தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவையுங்கள்: அன்புமணி

அக்.12-ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் அத்தேர்வை எதிர்கொள்வதற்கு, கூடுதல் அவகாசம் தேவை என தேர்வர்கள் கோரிக்கை விடுப்பது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கணினி முறையில் (CBT) தேர்வை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
மாறும் கூட்டணி: தேமுதிகவுக்கு பின்னடைவா?

திமுக, NDA, தவெக என 3 பக்கமும் கூட்டணி ஆப்சனை ஓபன் செய்து வைத்திருந்த தேமுதிக, தற்போது ரேஸில் பின்தங்கியுள்ளது. ராஜ்யசபா சீட்டை அதிமுக கைவிரித்தது முதல், திமுகவிடம் அக்கட்சி நெருக்கம் காட்டத் தொடங்கியது. அதிமுக ஆப்சனையும் குளோஸ் செய்யாமல், சீட் பேரத்தை கூட்ட தவெகவுக்கும் கதவை திறந்து வைத்தது. தற்போது NDA+விஜய் கூட்டணி அனுமானங்கள், தேமுதிகவின் பேர வலிமைக்கு ’செக்’காக மாறியுள்ளன.