News June 16, 2024
கேசிஆரை காணவில்லை: பாஜக போஸ்டர்

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவை காணவில்லை என போஸ்டர் அடித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். கேசிஆர் தனது சொந்த தொகுதியான கஜ்வெல் சட்டமன்ற தொகுதிக்கு வரவில்லை எனவும், மக்களால் அணுக முடியாத நிலையில் இருக்கிறார் எனவும் பாஜகவினர் கூறுகின்றனர். அவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
சற்றுமுன்: பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 80,285 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 24,854.50 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
News March 2, 2026
இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுக எங்கே சென்றது?

பாக்., ஆதரவுடன் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதி காத்ததாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். போலீஸ் பாதுகாப்புடன் கமேனி கொலையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், சாதாரண மக்கள் போராடினாலே கைதுசெய்யப்படும் நிலை உள்ளது என்றார். மேலும், திமுக எப்போதும் அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ் செய்வதாகவும் சாடியுள்ளார்.
News March 2, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹920 குறைந்தது

ஈரான் – US போரால் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று (மார்ச் 2) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹115 குறைந்து ₹15,660-க்கும், 1 சவரன் ₹920 குறைந்து ₹1,25,280-க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


