News September 3, 2025

BRS கட்சியிலிருந்து விலகுகிறேன்: கவிதா

image

BRS கட்சி மற்றும் MLC பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கவிதா அறிவித்துள்ளார். தன் தந்தை சந்திரசேகர ராவுக்கு அழுத்தம் கொடுத்ததால், தன்னை கட்சியில் இருந்து <<17591580>>நீக்கியதாகவும்<<>>, எனினும் தந்தையின் முடிவை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த தன்னை இப்போது யார் என்று கேள்வி கேட்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கவிதா <<17596611>>தனிக்கட்சி<<>> தொடங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Similar News

News March 6, 2026

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

image

<<19309113>>தங்கத்தை<<>> போன்றே வெள்ளி விலையும் இன்று (மார்ச் 6) குறைந்துள்ளது. 1 கிராம் ₹5 குறைந்து ₹290-க்கும், 1 கிலோ ₹5,000 குறைந்து ₹2.9 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 6, 2026

BREAKING: ₹7,500 ஆக உயர்த்தி ஸ்டாலின் அறிவித்தார்

image

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியத்தை ₹6,250-லிருந்து ₹7,500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், ஓராண்டு பணிமுடிந்த விற்பனையாளருக்கான சம்பள வரம்பு ₹8,600 – ₹29,000-லிருந்து ₹9,000 – ₹39,600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 26,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

News March 6, 2026

ALERT இனி போன்ல ‘ஹலோ’ சொல்லாதீங்க..

image

Unknown நம்பரில் இருந்து வரும் Call-ஐ Attend செய்தவுடன், எதிர்முனையில் பேசாத வரை நீங்கள் Hello சொல்லாதீர்கள். எதிரில் இருக்கும் Scammers அந்த Hello-வை ரெக்கார்ட் செய்து, AI மூலம் உங்கள் குரலை குளோனிங் செய்கின்றனர். இதைவைத்து நீங்கள் பேசுவது போல பேசி, உங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம். எனவே, உங்களுக்கு போன் செய்யும் நபர் பேசிய பின், நீங்கள் பேசத்தொடங்குங்கள். SHARE IT.

error: Content is protected !!