News March 21, 2024
கவிதாவை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ₹100 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News December 9, 2025
வாழ்த்து கூறி கூட்டணியை உறுதி செய்த ஸ்டாலின்

சமீபகாலமாக காங்., தலைவர்கள் அடுத்தடுத்து விஜய், SAC-யை சந்தித்ததால், தவெக கூட்டணியில் காங்., இணையலாம் என பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, கூட்டணி வலுவாக இருப்பதை CM ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கான கூட்டு முயற்சிகளை சோனியாவின் கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
BREAKING: விஜய் கூட்டத்தில் போலீசார் தடியடி

புதுச்சேரியில் விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் சூழல் உருவானது. ஒரு பாஸுக்கு 2 பேருக்கு அனுமதி என தவெக நிர்வாகிகள் கூறியதாகவும், ஆனால் ஒரு பாஸுக்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் கூறியதால் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
News December 9, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.9) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹96,000-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹199-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 உயர்ந்து ₹1,99,000-க்கும் விற்பனையாகிறது.


