News March 17, 2024
8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் கலந்து கொண்ட 84 வயதான கவுண்டமணி 8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசியுள்ளார். அரசியலை நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும், யோகி பாபுவும் நடித்துள்ளனர்.
Similar News
News November 19, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.18) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 19, 2025
கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.