News October 21, 2025
‘கட்டா குஸ்தி’ தாக்கத்தை ஏற்படுத்தியது: விஷ்ணு விஷால்

ராட்சசனைவிட, கட்டா குஸ்திதான் தன்னை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். OTT தளத்தின் வளர்ச்சியால் ‘கட்டா குஸ்தி’ அனைத்து தரப்பு மக்களிடம் சென்று சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது அடுத்த படமான ’ஆர்யன்’ மக்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என நம்பிக்கையுடன் உள்ள அவர், அதனால் தனது மகனின் பேயரை(ஆர்யன்) படத்திற்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 21, 2025
இது இருந்த பாம்பு வீட்டை அண்டாது!

மழைக்காலம் வந்தால் வீடுகளில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் வரவு அதிகரிக்கும். இதை தடுக்க உங்கள் வீட்டில் காட்டு துளசி செடி இருந்தால் போதும். துளசி போலவே காட்சி அளிக்கும் இந்த செடியில் இருந்து வரும் நறுமணம் பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும். காட்டு துளசியின் இலை, வேரை யாராவது எடுத்துச் சென்றால், பாம்பு அவர்கள் முன் வந்தால் கூட, நெருங்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.
News October 21, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். * என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பது என் குறிக்கோள்களே.
News October 21, 2025
WORLD ROUNDUP: மெக்சிகோ வெள்ளத்தில் 76 பேர் பலி

*பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற பதிவான லேசான நில அதிர்வு
*ஏமன் கடற்கரையில் எல்பிஜி டேங்கர் வெடித்த நிலையில் 23 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
*ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
*மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 76-ஆக உயர்வு
*டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் போராட்டம்