News March 19, 2024
சென்னை ரயில் நிலையத்தில் பெண் மீது தாக்குதல்

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் வான்மதி என்ற பெண்ணை அவரது கணவர் வெங்கடேசன் இரும்புக் கம்பியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக வான்மதியை வெங்கடேசன் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவியை தாக்கிய வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மனைவி வான்மதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
News April 28, 2025
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு HAPPY NEWS!

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Share it.
News April 28, 2025
அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு

செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும், சைவம், வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.