News April 12, 2025
‘கதக்’ கலைஞர் குமுதினி காலமானார்

இந்தியாவின் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவரான குமுதினி லக்கியா(95), வயது மூப்பு காரணமாக அகமதாபாத்தில் காலமானர். கதக் நடனத்துக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட குமுதினிக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி அரசு கவுரவித்துள்ளது. கதக் நடன வளர்ச்சிக்காக ‘கடம்ப் செண்டர் ஃபார் டான்ஸ்’ அமைப்பையும் அவர் நடத்தி வந்தார்.
Similar News
News October 16, 2025
கேன்சரை தடுக்கும் அருமையான பானம்

அரை இன்ச் பச்சை மஞ்சள் + 1 நெல்லிக்காய் + இரண்டு இன்ச் அளவில் இஞ்சி துண்டு + இரண்டு மிளகு + தண்ணீர் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் நீங்கும். இதைக் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்படும். கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உங்களை அண்டாது என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.
News October 16, 2025
கனமழை.. முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியாக முதல் மாவட்டமாக நெல்லைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று பல மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டதால், அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 16, 2025
விஜய் இந்த முடிவு எடுத்தால் சீமானுக்கு லாபம்

திமுக நடத்திய ரகசிய சர்வேயில் சுவாரஸ்யமான தகவல் இடம்பெற்றுள்ளது. அதாவது விஜய்யின் தவெக NDA கூட்டணிக்கு சென்றால், சீமானுக்கு மிகப்பெரிய லாபம் என தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் சீமான் 8% வாக்குகள் பெற்றதால், NTK அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில், 2026-ல் NDA கூட்டணியில் விஜய் இணைந்தால், சீமானின் NTK வாக்கு வங்கி 8%லிருந்து 12%ஆக அதிகரிக்குமாம்.