News November 19, 2024
தரையில் தூங்க முடியாமல் தவிக்கும் கஸ்தூரி!

தெலுங்கு மக்களை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, புழல் சிறையில் தூங்க முடியாமல் கஷ்டப்படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தரையில் தான் படுக்க வேண்டும் என்பதால், கஸ்தூரி தூங்க முடியாமல் தவித்துள்ளார். மேலும், சிறை உணவை முதலில் தவிர்த்த கஸ்தூரி, தற்போது அதை சாப்பிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் விரைவில் முதல் வகுப்பு சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.
Similar News
News March 19, 2026
EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? தவெக

<<19409031>>திண்டுக்கல் சீனிவாசன் & சண்முகம்<<>> ஆகியோரின் கருத்துகள் கேட்பதற்கே அருவருப்பாக இருந்தன என கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், இந்தியா பெண்களை மதிக்கும் ஒரு நாடு; குறிப்பாக, பெண்களை தெய்வமாக TN போற்றுகிறது என்றார். பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய நபர்களை பதவியிலிருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கும்போது, EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

BIG FLASH: தங்கம் விலை கடும் சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று(19.03.2026) மிகப்பெரிய அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $167(இந்திய மதிப்பில் ₹15,563) குறைந்து $4,835-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $75-ஆக உள்ளது. சென்னையில், தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹640 குறைந்த நிலையில் இன்றும் பெரியளவில் குறைய வாய்ப்புள்ளது.