News April 29, 2025
காஷ்மீர்: கவனம் ஈர்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி அரசை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பக்குவமாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான சசிதரூர், ஓவைசி, உமர் அப்துல்லா ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர். ஆளும் அரசை சாடாமலும், பாகிஸ்தானை கண்டித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பாராட்டப்படுகின்றன.
Similar News
News December 5, 2025
தள்ளிப்போன ஜனநாயகன் அப்டேட்

டிச.27-ல் மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனிடையே, படத்தின் 2-வது பாடலுக்கான அறிவிப்பை நேற்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், நேற்று AVM சரவணன் மறைவால், இந்த அப்டேட் தள்ளிப்போயுள்ளது. இதனால், அடுத்த சில நாள்களில் 2-வது பாடல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி கச்சேரிக்கு ரெடியா நண்பா, நண்பி?
News December 5, 2025
டிச.14-ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

டிச.14-ல், திருவண்ணாமலை கலைஞர் திடலில், திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான முறையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 5, 2025
BREAKING: மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி

ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சூரி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சூரியின் ஷூட்டிங்கில் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக, X தளத்தில் அவரை டேக் செய்து ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதற்கு, ஷூட்டிங்கில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சூரி குறிப்பிட்டுள்ளார். இனி கவனமுடன் இருக்க சொல்கிறோம், எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம் என சூரி குறிப்பிட்டுள்ளார்.


