News October 21, 2025

கரூர் துயரம்.. விஜய் எடுத்த புதிய முடிவு

image

கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், தங்களிடம் உள்ள ஆதாரங்களை அஜய் ரஸ்தோகியை நேரில் சந்தித்து வழங்க விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. ஐகோர்ட் நியமித்திருந்த SIT-யிடம் இருந்து ஆவணங்களை பெற்றுள்ள CBI அதிகாரிகள் இந்த வாரத்தில் முழு வீச்சில் விசாரணையில் இறங்க உள்ளனர். அதேபோல், SC நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு அடுத்த வாரம் கரூர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News October 21, 2025

மூலிகை: முடவாட்டுக்கால் கிழங்கின் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, முடவாட்டுக்கால் கிழங்கு மூட்டு வலி, முடக்குவாதம், எலும்பு அடர்த்தி குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும் *வயிற்று உப்புசம் & மலச்சிக்கலையும் குறைக்கிறது *இது பாறைகளில் இருந்து இரும்பு, கால்சியம், தாமிரம், தங்கம் மற்றும் சிலிக்கா போன்ற கனிமச்சத்துக்களை உறிஞ்சி வளருவதால், ஊட்டச்சத்து நிறைந்ததாக கூறப்படுகிறது. இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News October 21, 2025

பிற மதங்களுக்கு உதயநிதி இப்படி கூறுவாரா? தமிழிசை

image

‘நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்’ என உதயநிதி கூறியிருந்தார். ஆனால், பிற மதத்தினருக்கு ‘நம்பிக்கை உள்ளவர்கள்’ என்ற வார்த்தையை உதயநிதி பயன்படுத்துவதில்லை என்று தமிழிசை சாடியுள்ளார். திமுக போலி மதச்சார்பின்மையை கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்துக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே திமுக செயல்படுவதாகவும் விமர்சித்தார். இதற்கு 2026 தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பர் என்றும் கூறினார்.

News October 21, 2025

₹29,000 சம்பளம்.. 600 பணியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் RITES நிறுவனத்தில் காலியாகவுள்ள 600 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: பொறியியல் டிப்ளமோ. வயது உச்ச வரம்பு: 40. தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹29,735. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!