News September 28, 2025
கரூர் துயரம்: துணை ஜனாதிபதி இரங்கல்

கரூர் துயரம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கல்களை கூறிய அவர், கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 28, 2025
இழப்பீட்டை ₹50 லட்சமாக உயர்த்த திருமா வலியுறுத்தல்

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். போர்கால அடிப்படையில் காயம் அடைந்தவர்களுக்கு சிசிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உயிரிழந்தோருக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ₹10 லட்சம் இழப்பீட்டை, ₹50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
News September 28, 2025
எங்கு திரும்பினாலும் மரணம் ஓலம்..

கரூரில் எங்கு திரும்பினாலும் மரணம் ஓலம் கேட்பதால், இந்த இரவு தமிழக மக்களுக்கு துக்க இரவாக மாறியிருக்கிறது. உயிரிழந்தவர்களை நினைத்து, ஒவ்வொரு வீட்டிலும், தெருக்களிலும் மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால், தற்போதே CM ஸ்டாலின் கரூர் புறப்பட்டு செல்கிறார்.
News September 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.