News October 7, 2025
கரூர் துயரம்: CBI விசாரணை கோரும் மனுவை ஏற்றது SC

கரூர் நெரிசல் மரணங்கள் பற்றி சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் பரப்புரையின் போது முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த உமா, SC-யில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட SC, வரும் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
Similar News
News October 7, 2025
BREAKING: 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க் (UK), மைக்கேல் டிவோரெட்(FRANCE), ஜான் மார்ட்டினிஸ்(USA) ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் இயற்பியலில் அவர்களின் பங்களிப்புக்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மின் சுற்றுகளில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் முறையில் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டை கண்டுபிடித்துள்ளனர்.
News October 7, 2025
பாம்பாக மாறி கொத்தும் மனைவி.. கதறும் கணவர்!

பெண், பாம்பாக உருமாறி பழிவாங்குவது போல பல படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ‘என்னோட பொண்டாட்டி உண்மையாவே பாம்பாக மாறி என்ன கொத்துறா’ என உ.பி.,யில் மிராஜ் என்பவர் புகார் அளித்து ஷாக் கொடுத்துள்ளார். இரவில் தூங்கும் போது, தனது மனைவி நசீமுன் பாம்பாக மாறி, தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சித்ததாகவும் நடுக்கத்துடன் புகார் அளித்துள்ளார். இதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் பலரும் உறைந்துள்ளனர்.
News October 7, 2025
மனசாட்சியுடன் பேசுங்கள்: முத்துசாமி

கரூர் துயரில் அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு மனசாட்சியுடன் பேசுங்கள். திமுக பயப்படவில்லை என்ற அவர், விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.