News October 13, 2025
கரூர் துயரம்: ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன் என விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News October 13, 2025
கரூர்: அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் பலி

கரூர், பாலவிடுதி அருகே உள்ள உடையாபட்டி – கடவூர் சாலையில் சுரேஷ்குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சுரேஷ்குமார் மனைவி லீலா ராணி புகார் கொடுத்ததின் அடிப்படையில் பால விடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.
News October 13, 2025
கரூர் வழக்கு: CBI விசாரணை யாருக்கு கிடைத்த வெற்றி?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை CBI-க்கு SC மாற்றியுள்ளது. இது, TN அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசின் ஒருநபர் விசாரணை ஆணையம், ஐகோர்ட்டின் SIT-க்கு எதிராக TVK மற்றும் CBI விசாரணை கேட்டு 3 பேர் தொடர்ந்த வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மோசடியாக தொடரப்பட்ட வழக்குகள் எனவும், பாஜக விரும்பியதுபோல் CBI விசாரணை நடக்க உள்ளது எனவும் DMK வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார்.
News October 13, 2025
எப்பவும் சோர்வா இருக்கா? இத கவனிங்க முதல்ல!

நன்றாக தூங்கி எழுந்தாலும், அடிக்கடி சோர்வாக இருப்பதாக தோன்றுகிறதா? அப்படி இருந்தால் நமது உடலில் ஏதேனும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்று அர்த்தம். முக்கியமாக இரும்புச்சத்து, வைட்டமின் D, வைட்டமின் B12, மக்னீசியம், வைட்டமின் B9 ஆகியவை குறைவாக இருந்தால் அதிக சோர்வு, தசைப்பிடிப்பு, மனநிலை மாற்றங்கள் ஏற்படும். எனவே, உடனே டாக்டரை அணுகி, குறைபாட்டை அறிந்து, சரியான உணவு முறையை பின்பற்றுங்க.