News October 15, 2025
கரூர் துயரம்: ஸ்டாலின் பேரவையில் விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள், எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார். உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளதாகவும் CM தெரிவித்தார். கரூர் விவகாரம் குறித்து விவாதிக்க EPS கோரிக்கை வைத்த நிலையில், ஸ்டாலின் பேசி வருகிறார்.
Similar News
News October 15, 2025
விஜய்யின் தாமதமே கூட்ட நெரிசலுக்கு காரணம்: ஸ்டாலின்

தவெக தலைவர் செய்த தாமதத்தினால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ஸ்டாலின், கரூர் துயரம் பற்றி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், மதியம் 12 மணிக்கு வர வேண்டிய தவெக தலைவர், இரவு 7 மணிக்கு மிகவும் தாமதமாக வந்ததாக தெரிவித்தார். மேலும், சிறிது தூரத்திற்கு முன்னரே பரப்புரை வாகனத்தை போலீஸ் நிறுத்தக் கோரியும் அவர்கள் கேட்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
News October 15, 2025
இதுதான் பெஸ்ட் டீம்.. பேட் கம்மின்ஸ் கணிப்பு!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ODI தொடரை முன்னிட்டு, இரு அணிகள் வீரர்கள் உள்ளடக்கிய பெஸ்ட் XI டீமை ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் தேர்வு செய்துள்ளார். இதில், வார்னர், சச்சின், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வாட்சன், மைக்கேல் பெவன், தோனி, பிரெட் லீ, ஷேன் வார்னே, ஜாகிர் கான், கிளன் மெக்ராத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீங்க ஒரு பெஸ்ட் XI டீமை கமெண்ட் பண்ணுங்க?
News October 15, 2025
மீண்டும் ரீ-ரிலீஸாகும் அஞ்சான்.. இது வேற வெர்ஷன்!

‘அஞ்சான்’ படம் வரும் நவ. 28-ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸாகவுள்ளது. தோல்வி படத்தை யார் மீண்டும் தியேட்டரில் பார்ப்பாங்க என கேள்வி எழுந்த நிலையில், புது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ‘அஞ்சான்’ படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸை வாங்கியவர், வேறு பாணியில் எடிட் செய்து வெளியிட, அது யூடியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புது வெர்ஷனை தான் தியேட்டரில் வெளியிடுகிறாராம் லிங்குசாமி. இது வெற்றி பெறுமா?