News September 27, 2025
கரூர் துயரம்: ஜனாதிபதி திரெளபதி முர்மு வேதனை

கரூர் துயரம் மிகுந்த வேதனை அளிப்பதாக ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். விஜய்யின் கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என X-ல் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 28, 2025
தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனிடையே இதுதொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10,000 பேரே கூடுவார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், 500 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 28, 2025
விஜய் இழப்பீடு வழங்க வேண்டும்: விஷால்

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 38 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என விஷால் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய்யின் தவெக கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருங்காலங்களில் அரசியல் பேரணி நடத்தும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.