News October 2, 2025
கரூர் துயரம்: கைது செய்ய விரைந்தது போலீஸ்

கரூர் துயரச் சம்பவ வழக்கில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இதுவரை கைது செய்ய முடியவில்லை. நிர்மல்குமார் உதவியாளரிடம் போலீஸ் துருவி, துருவி விசாரணை நடத்தியது. இருவரின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்றுக்குள் இருவரையும் கைது செய்ய போலீஸ் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 2, 2025
பிரபல பாடகர் காலமானார்

புகழ்பெற்ற பாடகர் பண்டிட் சன்னுலால் மிஸ்ரா (89) காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். ‘ராக் விராட்’, ‘தும்ரி மெஹ்ஃபில்’ என்ற தனது ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்றார். இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு 2010-ல் பத்ம பூஷண் மற்றும் 2020-ல் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்தது. இவரது மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
ரேஷன் கார்டு தொலைஞ்சிடுச்சா..?

திரும்ப பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை ➤https://www.tnpds.gov.in/ பக்கத்தில் ‘பயனாளர் நுழைவு’ கிளிக் செய்யவும் ➤ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து, வரும் OTPயை பதிவிடுங்கள் ➤கார்டு டவுன்லோட் டேப் வரும் ➤அதில், ‘Smart card Print’ ஆப்ஷனை கிளிக் செய்து, மொழியை தேர்வு செய்யவும் ➤உங்களின் ஸ்மார்ட் கார்டை PDF வடிவத்தில் எளிதாக டவுன்லோட் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
News October 2, 2025
சிராஜின் வேகத்தில் திக்குமுக்காடும் வெ.இண்டீஸ்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. டாஸ் வென்று களமிறங்கிய அந்த அணிக்கு சிராஜ் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறார். டேகனரின் (0), அதனஸ்(12), பிராண்டன் கிங்(13) உள்ளிட்டோரின் விக்கெட்டை சிராஜ் அடுத்தடுத்து வீழ்த்தினார். பும்ராவும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி திக்கு முக்காட வைத்துள்ளார். 59/4 என்ற நிலையில் வெ.இண்டீஸ் உள்ளது.