News September 28, 2025
கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு

தவெக கூட்டத்தில் நடைபெற்ற துயரத்தால், இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிய, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324-256306, 7010806322 உள்ளிட்ட எண்கள் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. கூட்டத்தில் குழந்தைகள் சிலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News September 28, 2025
விஜய்யை கைது செய்யுங்கள்: நடிகை ஓவியா

விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘ARREST VIJAY’ என பதிவிட்டுள்ளார். ‘அமாம் விஜயை கைது செய்ய வேண்டும்.. விஜய்யை மட்டும் குற்றம்சாட்டுவது தவறு..’ என ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News September 28, 2025
கரூர் பெரும் துயரம்.. 2 குடும்பமே அழிந்தது

விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில், கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
News September 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 28, புரட்டாசி 12 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்:8:00 AM – 9:00 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM &
1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை