News September 29, 2025
அரசியலாக மாறியிருக்கும் கரூர் துயரம்

ஒருபுறம் எதிர்க்கட்சிகள், மறுபுறம் ஆளும் கட்சியின் கூட்டணி தலைவர்கள் மாறிமாறி குற்றச்சாட்டி வருவதால், கரூர் துயரம் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் சிக்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற துயரம் இனிமேல் நடக்கக்கூடாது; அதற்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமே தவிர குற்றச்சாட்டுவதால் என்ன பயன். இனியும் ஒரு அப்பாவி உயிர் கூட போகக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.
Similar News
News December 7, 2025
₹610 கோடியை பயணிகளிடம் திருப்பி கொடுத்த இண்டிகோ

விமான பயணிகளுக்கு பெரும் இடையூறாக மாறிய இண்டிகோ சேவை, படிப்படியாக<<18496873>>இயல்பு நிலைக்கு<<>> திரும்பி வருகிறது. இதனிடையே ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தையும் அந்நிறுவனம் பயணிகளுக்கு வழங்கியுள்ளது. இதுவரை ₹610 கோடியை அந்நிறுவனம் திருப்பி செலுத்தியுள்ளது. மேலும் மீதமுள்ளவர்களுக்கு இன்று இரவுக்குள் பணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இண்டிகோ உறுதி அளித்துள்ளது.
News December 7, 2025
IPL போட்டிகள் பெங்களூருவில் நடக்கும்: DKS உறுதி

சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் <<16705130>>11 பேர் உயிரிழந்ததை <<>>தொடர்ந்து 2026 IPL போட்டிகள் அங்கு நடைபெறாது என செய்திகள் வெளியாகின. முக்கியமாக புனேவில், RCB அணியின் போட்டிகள் நடக்கும் என கூறப்பட்டது. ஆனால் IPL போட்டிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினரும் DCM-முமான சிவக்குமார் உறுதி அளித்துள்ளார்.
News December 7, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்

பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. முக்கியமாக, EPS தலைமையை ஏற்க மறுக்கும் டிடிவி, விஜய் பக்கம் செல்வாரா (அ) வேறு கூட்டணி அமைப்பாரா என்பதற்கு இதுவரை பதில் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளுக்குள்(பிப். 24)கூட்டணி முடிவை அறிவிப்பேன் என டிடிவி தெரிவித்துள்ளார். மேலும், 5-வது அணி அமைக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


