News September 28, 2025

கரூர் துயரம்: உயிரிழந்தோருக்கு EPS நேரில் அஞ்சலி

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் உடலுக்கு EPS அஞ்சலி செலுத்தினார். உறவுகளை தொலைத்து கதறி அழும் உறவினர்களுக்கு அவர் தனது ஆறுதல்களை தெரிவித்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி, C விஜயபாஸ்கர், M R விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News January 18, 2026

நாடு முழுவதும் தாக்குதல்… உளவுத்துறை எச்சரிக்கை!

image

ஜனவரி 26-க்கு முன்னதாக, காலிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாதக் குழுக்கள் நாடு முழுவதும் பல நகரங்களை தாக்க முயற்சி செய்யலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த தாதாக்கள், வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தானிகளுக்கு கூலிப்படையாக செயல்படுவதாகவும், அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்பைக் சீர்குலைக்க கிரிமினல் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

TN காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

ஹாஸ்பிடலில் துரைமுருகன்.. நலம் விசாரித்த CM ஸ்டாலின்

image

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்த CM ஸ்டாலின், துரைமுருகனின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மேலும், உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்கவும் டாக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

error: Content is protected !!