News September 28, 2025

கரூர் துயரம்.. விசாரணை ஆணையம் அமைப்பு

image

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது, 36 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Similar News

News January 2, 2026

போதைப்பொருள் Network-ஐ ஒழிக்க வேண்டும்: CM

image

<<18739557>>திருச்சியில்<<>> பேசிய CM ஸ்டாலின், போதையில் இருந்து இளைஞர்களை மீட்க பெற்றோரும், சமூகமும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் எல்லைக்குள் போதைப்பொருள் நுழைவதை மத்திய அரசின் முகமைகள் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News January 2, 2026

பான் கறைகளை ஒழிக்க நூதன டெக்னிக்!

image

ரோட்டில் கால் வைக்கவே கூசும் அளவிற்கு, பெரிய பிரச்னையாகவே மாறிவிட்டது பான் கறைகள். இதற்கு ஒரு நூதனமான தீர்வை ஹைதராபாத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன மெஷினை போல எச்சில், பானை துப்ப, ஆங்காங்கே ஒரு டப்பாவை வைத்துள்ளனர். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில், பான் பிரியர்களை கன்ட்ரோல் பண்ண இது பத்தாது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News January 2, 2026

PM மோடிக்கு ஜெயில் தண்டனை உறுதியானதா? CLARITY

image

PM மோடி, அமித்ஷாவிற்கு ஐகோர்ட் ஜெயில் தண்டனை வழங்கி இருப்பதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACT CHECK) விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த தகவல் முற்றிலும் தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வீடியோ, போட்டோக்களை 87997 11259 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!