News September 28, 2025
கரூர் துயரமும், அரசியல் தலைவர்களின் நிலைபாடும்

கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்கள் பறிபோன விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது ஆளும் தரப்பின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனவும், விஜய் சரியாக திட்டமிடாததால் ஏற்பட்ட விளைவு என்றும் மாறி மாறி கருத்துகள் வருகின்றன. இதில் அரசியல் தலைவர்களின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள மேலே போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.
Similar News
News September 28, 2025
ஏற்கெனவே 12,000 பேர் LAYOFF.. இன்னும் தொடருமாம்!

பன்னாட்டு நிறுவனமான Accenture, கடந்த 3 மாதங்களில் உலக அளவில் 12,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் திறன் மேம்பாடு பயிற்சி அளிப்பது சாத்தியமில்லாததால், பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்நிறுவனத்தின் AI பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் வரையிலும் இந்த பணி நீக்கம் தொடரும் என கூறப்படுவதால், ஊழியர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
News September 28, 2025
கரூர் துயரம்: பாஜக மனுவை விசாரிக்க மறுப்பு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பாஜக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சென்னை ஐகோர்ட் நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக CBI விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், பொதுநல வழக்காக இருப்பதால், தான் விசாரிக்க இயலாது என ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் மறுத்துவிட்டார்.
News September 28, 2025
மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சர் புதிய அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விரைவில் ₹1,000 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், TN-ல் இதுவரை 20 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 52 மாதங்களில் 3,000 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு முழுநேரம், பகுதிநேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.