News September 27, 2025
கரூர் சோகம்: அமித்ஷா வேதனை

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால், ஆழ்ந்த வேதனை அடைந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 16, 2026
ஒரு நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா?

உலகம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. வெறும் 60 விநாடிகளில் ஏராளமான புதிய உயிர்கள் பிறக்கின்றன, தேனீக்கள் டன் கணக்கில் தேனை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், மனிதர்கள் கைப்பேசி திரையில் மூழ்கி, காடுகளை அழித்து, கழிவுகளை குவிக்கின்றனர். நேரத்தின் மதிப்பு எவ்வளவு பொன்னானது என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 16, 2026
ஒரே நாளில் மளமளவென குறைந்தது

பொங்கல் விடுமுறையான இன்று (ஜன.16) தங்கம் விலை முதல்முறையாக குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹480 குறைந்து ₹1,05,840-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 கிராம் 4 குறைந்து ₹306-க்கும், கிலோ வெள்ளி ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. எனவே, பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 16, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14 – 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.


