News October 7, 2025
கரூர் துயரம்.. நேரில் ஆறுதல் கூறிய நடிகை அம்பிகா

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் இங்கு வந்ததில் எந்த அரசியலும் இல்லை; யாரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேச வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வந்திருக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், குழந்தைகளை அழைத்து வந்தது பெற்றோர்களின் தவறு; இதுபோன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க சரியான நடவடிக்கை தேவை என்றார்.
Similar News
News October 7, 2025
விஜய்க்கு நேரில் செல்ல பயம்: துரைமுருகன்

கரூர் துயர் நடந்து 10 நாள்களுக்கு மேலான நிலையில், இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய துரைமுருகன், குற்றம் புரியவில்லையென்றால், தைரியமாக நேரில் சென்றிருக்கலாம், தன் நெஞ்சே தன்னை சுடுவதால் விஜய்க்கு வெளியில் வர பயம் என்று காட்டமாக விமர்சித்தார்.
News October 7, 2025
பாலியல் வழக்கில் நடிகர் கைது

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, சீரியல் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, கன்னட இயக்குநரும் நடிகருமான ஹேமந்த் குமார் கைதாகியுள்ளார். கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி ₹60,000 முன்பணம் கொடுத்த ஹேமந்த், புரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பை அழைத்து சென்றுள்ளார். அங்கு ஜூஸில் மது கலந்து கொடுத்து, அப்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவும் எடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை தொடர்கிறது.
News October 7, 2025
இன்ஸ்டாவில் இனி லொகேஷன் ஷேர் பண்ணலாம்

Snapchat-ஐ போல இனி இன்ஸ்டாவிலும் லொகேஷனை நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம். குறிப்பிட்ட friends Group-ல் லொகேஷனை ஷேர் செய்வது மட்டுமின்றி, தேவையில்லாத நேரத்தில் ஆஃப் செய்தும் கொள்ளலாம். இந்த Instagram map அப்டேட் ஆகஸ்ட் மாதத்திலேயே USA, கனடாவில் வந்துவிட்டது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. Andriod, iOS என அனைத்திலும் இந்த அப்டேட்டை இன்ஸ்டா பயனர்கள் யூஸ் பண்ணலாம்.